டாஸ் வீசுவதில் ரோஹித் முறைகேடு..? வாசிம் அக்ரம் கூறுவதென்ன.?

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள  உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதலில் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 397 எடுத்தது. அடுத்து இறங்கிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செல் அதிரடியாக 134 ரன்களும், கேன் வில்லியம்சன் 64 ரன்களும் எடுத்து 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியது.  இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி அனைவரும் பாராட்டிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் தனது வினோதமான பேச்சால் சர்ச்சையை கிளப்பினார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சிக்கந்தர் பக்த்,  இந்திய அணியும், ரோஹித் சர்மாவும் டாஸ் போடுவதில் முறைகேடு செய்வதாக  குற்றம் சாட்டினார். இதுகுறித்து  பேசியபோது, ” ரோஹித் சர்மா  டாஸ் சுண்டி விடும்போது  நாணயத்தை வெகுதூரம் வீசுகிறார். இதனால் அருகில் இருக்கும் மற்ற அணி கேப்டன்கள் அந்த நாணயத்தை சென்று பார்ப்பதே இல்லை. ஐசிசிமற்றும் பிசிசிஐ ஆகியவற்றுடன் இணைந்து ரோஹித் சர்மா டாஸ் போடுவதில் முறைகேடு செய்து தங்கள் பக்கம் போட்டியை சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்” என்றார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ” நாணயம் எங்கு விழ வேண்டும் என்று யார் முடிவு செய்வார்கள்? எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது . எனக்கு அந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவே விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்