பால் விலை உயர்த்தப்படவில்லை.. ஆவின் கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாடு முழுவதும்  பொதுமக்கள் ஆவின் பாலை அதிகம் பயன்படுத்தி  வருகின்றனர்.   திருநெல்வேலி ஆவின் சார்பில்
200 மி.லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆவின்  பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

அதுகுறித்து வெளியான அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, தினசரி 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொது மக்கள் பயன் பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஆவின் மூலம் Cow Milk அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகை Cow Milk 200 ml Delite எனும் பெயரில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்