15 லட்சம் தராத பிரதமர் மோடி, 14.5 லட்சம் கோடி கொடுத்துள்ளார்.! ராகுல்காந்தி குற்றசாட்டு.!

PM Modi - Rahul Gandhi

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டும் விவசாய கட்சிக்கு விட்டுக்கொடுத்து 199 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.  எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக 200 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக  போராடி வருகிறது. இன்று , ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் சாதுல்ஷாஹர் நகரில் பிரச்சரத்தில் ஈடுப்பட்ட  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் அரசு செய்த சாதனைகள் குறித்தும், பாஜக , பிரதமர் மோடி பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

வளர்ந்த இந்தியாவில் 4 முக்கிய தூண்கள்… பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இலக்கு – பிரதமர் மோடி பேச்சு

அவர் கூறுகையில், ” பிரதமர் மோடி அனைத்து மக்கள் வங்கி கணக்குகளிலும், 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை. அதை இனிமேலும் அவர் தரமாட்டார். அனால், கோடீஸ்வரர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்வார். இதுவரை ரூ. 14.5 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில் 50 சதவீதத்தினர் ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தியது. காங்கிரஸ் அரசு என்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசு என ஆளும் காங்கிரஸ் மாநில அரசு பற்றி கூறினார்.

அடுத்து, பிரதமர் மோடி பொதுமக்களுக்கான காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அதற்கான பணத்தை மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி மூலம் வசூலித்து விடுகிறார். ஆனால், புயல் வந்தால், கனமழை பெய்தால், விவசாயிகள் நஷ்டம் அடைந்தால், காப்பீட்டு நிறுவனம், இதுவரை ஒரு ரூபாய் கூட தந்ததில்லை. இதுதான் நரேந்திர மோடியின் திட்டம் எண்வும், ஹிந்தி படியுங்கள், ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் பேசுவார்கள்.  ஆனால், பாஜக தலைவர்களைக் கேட்டால், அவர்கள் குழந்தைகள் ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்து வருவதாக என்று சொல்வார்கள் என பாஜகவினர் பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI