11 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலுடன்..! சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த பாஜக திட்டம்..!!
11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து பா.ஜ.க. பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் காங்கிரஸ் ஆளும் மிஜோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரிலும் ஆட்சிக்காலம் முடிவடைகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் குடிரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளின் காலம் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியே நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU