மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை! அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை என்ன?

senthil balaji

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனை செய்து கடந்த ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தற்போது திமுகவில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதுமட்டுமில்லாமல், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து,  அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.

இதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் (இருதய) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

அவ்வப்போது உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கும் சென்று வந்தார்.  இதனிடையே, உடல்நலனை காரணம் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த சூழலால் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 22ம் தேதி வரை 10வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையிலேயே உள்ளார். இந்த சமயத்தில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு மருத்துவமனையில்பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும், கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கால் மரத்துப்போவதாக செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜூன் 14ம் தேதி கைதான செந்தில் பாலாஜிக்கு ஜூன் 22ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்