108 எம்பி கேமரா.. 12 ஜிபி ரேம்.. 5000mAh பேட்டரி.! விரைவில் களமிறங்கும் ​​ரெட்மியின் புதிய மாடல்.!

RedmiNote13RPro

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி, கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 13 சீரிஸில் ரெட்மி நோட் 13, நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ + என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் விலையில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

அடுத்ததாக இப்போது, ​​ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், சீனா டெலிகாம் பட்டியலில் ஸ்மார்ட்போனின் விவரங்கள், வடிவமைப்பைக் காட்டும் படங்கள் மற்றும் சந்தையில் வெளியாகும் தேதியைத் வெளிப்படுத்தியுள்ளது.

23,800mAh பேட்டரி, 200MP கேமரா..! முரட்டுத்தனமான லுக்கில் யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3.!

டிஸ்பிளே

சீனா டெலிகாம் பட்டியலின்படி, 2311FRAFDC என்ற மாடல் எண் கொண்ட நோட் 13 ஆர் ப்ரோ, 6.74 இன்ச் அளவுள்ள டாட் பன்ச் கட்அவுட் ஓஎல்இடி பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷனுடன் எச்டி+ தெளிவுத்திறனை வழங்குகிறது. அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

பிராசஸர்

பட்டியலில் காட்டப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பிராசஸருக்கு MT6833P என்ற குறியீட்டுப் பெயர் உள்ளது. எனவே ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோவில், மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி சிப்செட் அல்லது டைமன்சிட்டி 6080 சிப்செட் பொருத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. பாதுகாப்பிற்காக சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பின் படி, பின்புறம் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 16 எம்பி செல்ஃபி கேமராப் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.

செயலில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்குவதாக கூகுள் அறிவிப்பு.!

பேட்டரி

இதில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மற்றபடி, இதில் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்களும் வரலாம்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

மிட்நைட் பிளாக், டைம் ப்ளூ, மார்னிங் லைட் கோல்ட் என மூன்று வண்ணங்களில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இந்த ​​ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ வெளியாகலாம். சீனா டெலிகாம் பட்டியலின்படி, நவம்பர் 20ம் தேதி அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1999 யுவான் (ரூ.23,599) என்ற விலைக்கு விற்பனை செய்யப்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்