சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தின முன்னேற்ப்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் சந்திப் நந்தூரி பேசியது :
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில வைத்து சுதந்திர தினவிழா நடத்திடும் வகையில், மைதானத்தில் முன்னேற்ப்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், பள்ளி கல்வி துறை சார்பாக அதிகமான மாணவ மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
காவல்துறை, தேசிய மாணவர் படை, இந்திய செஞ்சிலுவை நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகளின் அணிவகுப்பை நேர்த்தியாக சிறந்த முறையில் நடத்த வேண்டும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த முறையில் குடிநீர் வசதி மற்றும் சிற்றுண்டி வழங்கிடவும் வேண்டும் என கூறப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.