கிரிக்கெட்டை மையப்படுத்தி புதுப்படம்…உலகக்கோப்பையில் அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்!

Sachin Tendulkar - gowtham vasudevan

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக  தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், இறுதியாக நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ரிது வர்மா ஆகியோர், இன்று நடைபெற்று கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் INDVsNZ அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் கமெண்ட்ரி செய்ய வருகை தந்திருந்தனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா! காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில், போட்டி தொடங்கியதும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கையில், ஆர்.ஜே.பாலாஜி நீங்களும் கிரிக்கெட் மாதிரி படங்கள் இயக்க உள்ளீர்களா? என்று கேட்க அதற்கு பதிலளித்த கௌதம் மேனன், “ஆம்… அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளதாக கூறினார்.

மலையாள சினிமாவில் மிரட்ட போகும் எஸ்.ஜே.சூர்யா! யாருக்கு வில்லனாகிறார் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் கதையை உருவாக்கி வருவதாகவும், இரண்டு இளைஞர்களை வைத்து மாவட்ட அளவில் இருந்து மாநில அளவிற்கு விளையாடும் கதையாக இருக்கும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்