இனி அமெரிக்காவில் ‘தீபாவளி’ பொது விடுமுறை.. வெளியான அசத்தல் அறிவிப்பு.!

Diwali holiday in USA NY

கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொண்டாட்டமாக பார்க்கப்படும் தீபாவளி பண்டிகை, வடமாநிலங்களில் மட்டும் 5 நாள் விழாவாக கொண்டாடபடுகிறது.

இந்த தீபாவளி பண்டிகையானது இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் , நியூயார்க் மாகாணத்தில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் நேற்று (செவ்வாய்) சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு நியூயார்க் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளார்.

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்…

அதாவது இனி நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு தீபாவளி தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை விடப்படும் என கூறினார். இதன் மூலம் அமெரிக்க மாணவர்கள் உட்பட அனைவரும் மற்ற நாட்டு கலாச்சாரத்தையும், கொண்டாட்டங்களையும் அறிந்து கொள்வர் என குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் மாகாணம் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களால் நிறைந்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்து கொண்டாட இப்படி ஒரு முக்கியமான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம்.

இருள் நீங்கி, ஒளியின் கொண்டாட்டமாக தீபாவளி கொண்டாடப்படுவதாகவும், அதனால்தான் இன்றிரவு (செவ்வாய்), அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க இந்த நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் தீபாவளியைக் கொண்டாடக் கூடியிருந்தபோது, தீபாவளியை நியூயார்க் நகரப் பொதுப் பள்ளி விடுமுறையாக மாற்றும் வரலாற்றுச் சட்டத்தில் கையெழுத்திட்டதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin - RN RAVI
TVK Leader Vijay
Supreme court of India - TN Governor RN Ravi
Pawan Kalyan
US President - China President
murder