கமல் சொன்னதை காது கொடுத்து கேட்காத தாணு! கடைசியில் பிளாப் ஆன ஆளவந்தான்!

aalavandhan and thanu

கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும். அதில் ஒன்றுதான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஆளவந்தான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி இருப்பார்.

ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, அனு ஹாசன், மிலிந்த் குணாஜி, கிடு கித்வானி, ஸ்ரீவல்லப் வியாஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். அந்த சமயம் இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக லாபத்தை ஈட்ட வில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு ஹிட்டானது.

என்னது ‘கபாலி’ 1000 கோடி வசூலா? தயாரிப்பாளர் தாணு கூறிய தகவல்!

அந்த சமயமே படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தானு பிரமாண்டமாக 500 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டார்.  இந்த நிலையில்,  இப்படத்தின் கதை களத்தை தானும் மாற்றியதாகவும் கமல் சொன்ன பேச்சை அவர் கேட்கவில்லை என்றும் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

படத்தை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் கமல்ஹாசன் தயாரிப்பாளர் தாணுவிடம் பெரிய பட்ஜெட்டில் எல்லாம் தயாரிக்கவேண்டாம் மீடியம் பட்ஜெட்டில் ஒரு சேரியில் நடக்கும் கதை தான் எனவே அதற்கு தங்குதது போல நாம் எடுப்போம் என்று கூறினாராம். அதற்கு கலைப்புலி தாணு சுமாரான பட்ஜெட்டில் எல்லாம் எடுக்கவேண்டாம் பிரமாண்டமாக எடுப்போம் என்று கதைக்களத்தை மாற்றிவிட்டாராம்.

பிறகு படத்தை எடுக்க ஆஸ்ரேலியாவில் இருந்து கேமராக்கள் வரவழைக்கப்பட்டு கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்தாராம். படத்தை பாதி எடுத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே கலைப்புலி தாணு படத்தின் பட்ஜெட்டை குறைத்துவிடுவோம் என்று கூறினாராம். அதற்கு கமல்ஹாசன் நான் ஆரம்பத்தில் இதை தான் சொன்னேன். இப்பொது படம் பாதி எடுக்கப்பட்ட பிறகு இப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டாராம்.

இதனால் இருவருக்கும் அந்த சமயம் மன கசப்பு ஏற்பட்டதாம். ஆனால், ஆளவந்தான் தோல்வி படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும், தோல்வி படம் இல்லையாம்.  படம் வெற்றி பெற்றாலும் படத்தின் தாணு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லையாம். காரணம் தாணு தான் எனவும் தயாரிப்பாளர் தேனப்பன் சூசகமாக கூறியுள்ளார்.  மேலும், ஆளவந்தான் திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், படம் மீண்டும் 1000 திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்