கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள்.. பெரியார் பேரன்களின் பேரணி துவக்கம்… 8,647 கி.மீ பயணம்.! 

Minister Udhayanidhi Stalin Bike Rally

தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக வரும் டிசம்பர் 17ஆம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தான் முதன் முதலாக திமுக இளைஞரணி சார்பில் மாநாடு நடைபெற்றது .

அதன் பிறகு தற்போது 2வது முறையாக திமுக இளைஞரணி சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி தலைவராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மாணவர்களின் P.E.T பீரியட்களை கடன் வாங்காதீங்க.. அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!

இந்த மாநாடு குறித்த பிரச்சாரத்தை இன்று கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, மாநில உரிமைகளை மத்திய அரசிடமும் மீட்க வேண்டும் என்றும், திமுக செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கன்னியாகுமரியில் துவங்கியுள்ள பைக் பேரணியானது 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்றையடையும் வண்ணம் அமைய உள்ளது. இந்த பைக் பேரணி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், ” கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட DMKRiders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.

13 நாட்கள் – 234 தொகுதிகள் – 504 பிரச்சார மையங்கள் – 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி – மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்.” என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்