தீரா கிரிக்கெட் மோகம்…இந்திய அணி ஆட்டத்தை காண மும்பை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி.!

Rajinikanth - INDvsNZ

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பையில் இன்று (நவம்பர் 15) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தை காண சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றடைந்தார்.

தீரா கிரிக்கெட் மோகம் கொண்ட ரஜினிகாந்த், முக்கிய போட்டியின் போது நேரடியாக சென்று கண்டு மகிழ்வது வழக்கம். அந்த வகையில், மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ள சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பிசிசிஐயால் வழங்கப்பட்ட கோல்டன் டிக்கெட்டை வைத்திருக்கும் ரஜினிகாந்த், அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி அவர் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்றைய போட்டியை கண்டுகளிக்கவுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் நடந்து வருகிறது. அனைவரும் அவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி இன்று மதியம் தொடங்க உள்ளது.

பொறுக்கி பொறுக்கி…கடும் வாக்குவாதத்தில் தினேஷ்- விஸ்ணு!பிக் பாஸ் வீட்டில் வெடித்த பெரிய சண்டை!

இந்நிலையில், நேற்றிரவு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்த் இடம் செய்தியாளர்கள் அவரது பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, ரஜினிகாந்த் தான் படப்பிடிப்பிற்கு செல்லவில்லை என்றும், மும்பையில் நடக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை மும்பை வந்த ரஜினிகாந்த் உடன் அவரது மனைவி லதாவும் காணப்பட்டார். இதற்கிடையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் ஏத்துக்க மாட்டாங்க! ஹிட் படத்தை ரிலீஸ் செய்ய யோசித்த விஜய்?

முன்னதாக, 2011ம் ஆண்டு மும்பையில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியை போட்டியை ரஜினிகாந்த் கண்டு மகிழ்ந்தார். அந்த போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி வென்றது குறிப்பிடத்தக்கது. அதுபோல், இந்த முறையும் இந்தியா அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்