வாரத்தின் 3வது நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! 24 நிறுவங்களின் பங்குகள் உயர்வு.!
தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, தீபாவளி சிறப்பு வர்த்தக நாளிலும் ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் தீபாவளிக்கு மறுநாள் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 60 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமானது. வாரத்தின் முதல் நாளிலேயே அதுவும் தீபாவளி முடிந்த பிறகு பங்குச்சந்தை சரிவை சந்தித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 65,461.54 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தும், நிஃப்டி 150 புள்ளிகள் வரை உயர்ந்தும் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 621.94 புள்ளிகள் உயர்ந்து, 65,555.81 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 191.50 புள்ளிகள் உயர்ந்து 19,631.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,933.87 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.55 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.22 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 82.69 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 8.00 அல்லது 0.12% உயர்ந்து ரூ.6,516 ஆக விற்பனையாகி வருகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, டெக் மஹிந்திரா லிமிடெட் (+3.51%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (+2.09%), விப்ரோ லிமிடெட் (+1.87%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (+1.85%), டாடா ஸ்டீல் லிமிடெட் (+1.78%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (-0.11%), இண்டஸ் இண்ட் பேங்க் லிமிடெட் (-0.13%), மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (-0.06%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (-0.64%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.