மஹா கந்தசஷ்டி விரதமும் சொல்லப்படாத ரகசியமும்..!

Maha Kanda Sashti

மஹா கந்தசஷ்டி விரதம் இன்று துவங்கியுள்ளது. இந்த விரதம் முருகப்பெருமானை நோக்கி ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் இருக்கும் சொல்லப்படாத உண்மைகளையும் விரத முறைகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சஷ்டி என்றாலே விரதம் தான் நம் நினைவுக்கு வரும். அதுவும் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மஹா சஷ்டி மிக சிறப்பு வாய்ந்தது. இந்த மஹா சஷ்டி விரதம் மேற்கொண்டால் அதீத பலன்களையும் முருகப் பெருமானின் ஆசியையும் பிற முடியும் என்பது ஐதீகம். குறிப்பாக ஒரு வருடத்திற்குள்  குழந்தை பாக்கியம் கிட்டும்.  விரதம் என்றால் பசியோடு இருப்பது தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த பசி என்பதுதான் நம் உடலின் அக்னி தத்துவம். முருகன், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த அக்னியின் வழியாக பிறந்தவர். ஆக பசியும் முருகரும் அக்னி தத்துவத்திற்கு தொடர்புடையதாகும். இந்த ஆறு நாள் விரத முறைகளை கடைபிடிப்பதில் ஒரு சிலர் தண்ணீர் மட்டுமே பருகி கடைபிடிப்பார்கள்.

ஒரு சிலர் ஒருவேளை உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை கடைபிடிப்பார்கள். இன்னும் சில பேர் ஒரு படி மேல் சென்று மிளகை வாயில் கடித்துக் கொண்டு விரதம் மேற்கொள்வர்களும் உண்டு. இந்த விரதம் மூலம் நீங்கள் நாவையும் பசியையும் கட்டுப்படுத்துகிறீர்கள். இந்த பசி கட்டுப்பாட்டிற்குள் வரும்போது அக்னி தத்துவத்தை ஆட்கொள்கிறீர்கள்.

இந்த அக்னியின் மூலம் அதில் உள்ள நேர்மறை சக்திகள் கிடைக்கிறது. இந்த அக்னி தத்துவம் தன்னம்பிக்கையை உருவாக்கியது எதையும் சமாளிக்க கூடிய ஒரு எனர்ஜியை உங்களுக்கு கொடுக்கிறது. மேலும் இந்த விரத முறைகளை கடைபிடிக்கும் போது கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால் இன்னும் கூடுதல் பலன் விரைவாக கிடைக்கும்.

இதற்கு மற்றொரு கருத்தும் உள்ளது. விரதம் என்றால் வைராக்கியம் என்பதாகும். ஒரு விஷயத்தை நோக்கி போக்கஸ் பண்ணுகிறோம் இது எனக்கு கிடைத்தே ஆக வேண்டும் என்று இந்தக் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்கிறோம். எனவே நம் எண்ணங்களை ஒன்றாக்கி ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால் நினைத்த காரியம் கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது.

இந்த விரத முறைகளை மேற்கொண்ட பின் ஆறாவது நாளாக திருச்செந்தூரில் சூரசம்காரம் நடைபெறும். ஒரு சிலர் கடைசி நாளாக இந்த சூரசம்காரத்தை பார்த்துவிட்டு மறுநாள் திருக்கல்யாணம் முடிந்த பிறகு தான் உணவு எடுத்துக் கொள்வார்கள். இப்படியும் விரதத்தை முடிக்கலாம்.

முருகன் சூரனை வாதம் செய்கிறார் என்பது அசுரனை அழிப்பது மட்டுமல்ல சூரன் என்றால் நமக்குள் இருக்கும் கெட்டது, தோஷம், பாவம், எதிர்வினைகள், வரக்கூடிய பிரச்சனைகள் இவை அனைத்தையும் தீர்க்கக் கூடிய சக்தி இந்த கந்த சஷ்டிக்கு உள்ளது. ஆகவே இந்த கடைப்பிடித்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று முருகப் பெருமானின் அருளையும் பெற்று சிறப்புற வாழ்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்