ஜம்மு காஷ்மீர் ஹவுஸ் போட்டில் ஏற்பட்ட தீ விபத்து.. 3 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா மையமான தால் ஏரியில் ஹவுஸ் போட்டில் நேற்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள டால் ஏரியில்தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த ஹவுஸ் போட்டில் பயணம் செய்து வருகின்றனர்.
டால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹவுஸ் போட் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், தற்போது தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர், சிறப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் மூன்று சுற்றுலாப் பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது என கூறினார்.