எதற்கும் துணிந்தவன் கொடுத்த ஒரே அடி! படம் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்குனர்?

etharkum thuninthavan

சினிமா துறையில் பொதுவாக ஒரு இயக்குனர் பெரிய வெற்றி படத்தை கொடுத்து விட்டால் அவர்களை தங்களுடைய அடுத்த படங்களில் இயக்க வைக்க பல நடிகர்கள் அழைத்தே வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் அதே ஒரு இயக்குனர் தோல்வி படமும் அல்லது சுமாரான படமும் கொடுத்து விட்டால் சிறிய நடிகர்கள் கூட அவர்களை அழைத்து கதை கேட்பதில்லை.

இதன் காரணமாகவே அந்த இயக்குனர்கள் படங்களை இயக்காமல் பல ஆண்டுகள் கதைகளை வைத்துக்கொண்டுவிட்டு யாரிடம் சொல்லலாம் என இருப்பார்கள். அப்படிதான் இயக்குனர் பாண்டிராஜ் கூட,  இவர் கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் கடந்த ஆண்டு 2022-மார்ச் மாதம் வெளியானது.

எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டியராஜ் எந்த படத்தையும் இயக்கவில்லை. சமீபத்தில் நடிகர் விஷாலை சந்தித்து அவர் ஒரு கதையை கூறி அந்த திரைப்படத்தினை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அந்த திரைப்படமும் சில காரணங்களால் இன்னும் எடுக்காமல் இருக்கிறது.

நீ ஜெயிச்சிட்ட மாறா! முதன் முறையாக கார்த்தியை கட்டிப்பிடித்த சூர்யா…எதற்காக தெரியுமா?

இதனையடுத்து, கடைசியாக அவருடைய இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’  சரியாக போகாத காரணத்தால் விஷாலை வைத்து அவர் இயக்கும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விருப்பம் இல்லை படத்தை எடுக்கவேண்டாம் என்பது போல குறிவிட்டார்களாம். இதனால் அந்த படம்  அப்படியே கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்கலாம் என இயக்குனர் பாண்டிராஜ் முடிவு செய்திருக்கிறாராம்.பல மெரினா, பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த பாண்டிராஜ் தற்போது நல்ல கதை வைத்துக்கொண்டும்   படம் இயக்க முடியாமல் இருப்பதால் சோகத்தில் இருக்கிறாராம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்