வெங்கட்பிரபு பார்ட்டியில் கலந்து கொள்ளாத விஜய்! காரணம் என்ன தெரியுமா?

vijay and Venkat Prabhu

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தற்போது விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்கி வருவதன் காரணமாக அவருடைய பிறந்த நாளை தளபதி 68 படக்குழுவுடன் கொண்டாடினாராம். வழக்கமாக பார்டி என்றாலே வெங்கட் பிரபுவுக்கு பிரியம் எனவே,  அவருடைய கேங் பிரேம் ஜி, வைப்பைவ் ஆகியோர் எல்லாம் சேர்ந்து வெங்கட் பிரபுவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள்.

தாய்லாந்தில் ஒரு படகு வாடகைக்கு எடுக்கப்பட்டு அந்த படகில் நடுகடலுக்கு சென்று அவருடைய பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அங்கு தான் அவருடைய பிறந்த நாள் பார்டியும் நடந்திருக்கிறதாம். இந்த பார்ட்டில் தளபதி 68 படத்தில் இன்னும் கலந்து கொள்ளாத பிரபலங்கள் பலரும் கலந்த்து கொண்டார்களாம். வெங்கட் பிரபு பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்புக்கு விடுமுறை விட பட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருந்தார்.

ரிலீசுக்கு முன்பே முரட்டு வியாபாரம்! ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘தளபதி 68’?

எனவே, விடுமுறையை கொண்டாடும் வகையில் சிறப்பான பிறந்த நாள் பார்டி நடத்தப்பட்டதாம். சினேகா, பிரேம்கி அமரன், வைபவ் , அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் விமானம் மூலம் வெங்கட் பிரபுவின் பார்ட்டிக்கு சென்றார்களாம். அங்கு தான் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் இந்த பிறந்த நாள் பார்டியில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லையாம்.

அதற்கு காரணமே விஜய் பொதுவாக இந்த மாதிரி விஷயங்களை விரும்ப மாட்டாராம். ஆரம்ப காலத்தில் ஒரு சில பார்ட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும் அவருக்கு இப்போது இருக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் பார்டிக்கு எல்லாம் சென்றால் சரி வாராது என நினைத்து கொண்டு வெங்கட் பிரபுவின் பிறந்த நாள் பார்டியில் அவர் கலந்து கொள்ளவில்லையாம்.

பார்டிக்கு அழைத்தவுடன் இல்லை நீங்கள் ஜாலியாக கொண்டாடுங்கள் என கூறிவிட்டு ரூமில் இருந்தாராம். மேலும், இந்த தளபதி 68 திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, யோகி பாபு, ஜெய்ராம், லைலா, அஜ்மல் அமீர், பிரேம்கி, வைபவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்