மீண்டும் கவர்ச்சி குத்தாட்டம் போட ரெடியான சமந்தா! எந்த படத்துக்காக தெரியுமா?

Samantha dance

நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஓ சொல்றியா மாமா’ பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் மிகவும் ட்ரெண்டாகிவிட்டார் என்று கூறலாம் . அவருக்கு ஏற்கனவே இருந்த மார்க்கெட்டை சற்று உயர செய்ததும் அந்த பாடல் தான். அந்த அளவிற்கு அந்த பாடலில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

அந்த பாடலைத் தொடர்ந்து அதே போன்று மீண்டும் ஒரு நல்ல குத்து பாடலில் சமந்தா நடனமாடுவாரா என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், தற்போது அவர்களுக்காகவே ஒரு கொண்டாட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், தற்போது நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் அதே போல ஒரு கவர்ச்சி பாடலில் நடனம் ஆட இருக்கிறாராம் .

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில்  ‘ஓ சொல்றியா மாமா’  பாடலைப் போல ஒரு குத்துப் பாடலை இசையமைப்பாளர் தேவி  ஸ்ரீ பிரசாத் இசையமைத்து கொடுத்து இருக்கிறாராம். அந்த பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாட பட குழு பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாம்.

சமந்தாவுக்கு நோய்வர நீங்க தான் காரணம்! விஜய் தேவரகொண்டாவிடம் வம்பிழுத்த பிரபல நடிகர்?

ஆனால், இறுதியாக இந்த பாடலிலும் சமந்தாவே நடனமாட வைத்தால் கண்டிப்பாக அந்த பாடலைப் போல இந்த பாடலும் வெற்றி பெறும் என திட்டமிட்டு அவரிடம் இந்த கவர்ச்சியான பாடலில் நடனம் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். எனவே, அதற்கு சமந்தா கண்டிப்பாக சம்மதம் மட்டும் தெரிவித்துவிட்டால் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருந்த ‘ஓ சொல்றியா மாமா’  பாடலைப் போல ஒரு கவர்ச்சி  பாடல் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. எனவே, சமந்தா பாடலில் நடனம் ஆடுவார் இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். மேலும், நடிகை சமந்தா கடைசியாக குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா சிட்டால் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதனை தவிர சில படங்களில் நடிக்க கதை கேட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list