நாள் முடிவில் சென்செக்ஸ் ஏற்றம்.! டெக் மஹிந்திரா உள்ளிட்ட 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு..!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சரிவை சந்தித்து வந்தது. ஆனால் வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டியானது கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக இன்றைய வர்த்தக நாள் முடிவில் பங்குச்சந்தை ஏற்றத்தை கண்டுள்ளது.
கடந்த நாட்களைப் போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, வர்த்தக நாளில் முடிவில் ஏற்றமடைந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதன்படி, இன்று காலை சென்செக்ஸ் 198.72 புள்ளிகள் வரை குறைந்தும், நிஃப்டி 20 புள்ளிகள் வரை குறைந்த்தும் வர்த்தகமானது.
ஆனால், தற்போது வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 72.48 புள்ளிகள் உயர்ந்து, 64,904.68 புள்ளிகளாகவும், நிஃப்டி 30.05 புள்ளிகள் உயர்ந்து 19,425.35 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,832.20 புள்ளிகளாவும், நிஃப்டி 19,395.30 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.94 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80.97 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 0.41 அல்லது 26.00% உயர்ந்து ரூ.6,398 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது.
அதன்படி, என்டிபிசி லிமிடெட் (+2.12%), டெக் மஹிந்திரா (+1.27%), அல்ட்ராடெக் சிமெண்ட் (+1.05%), பஜாஜ் ஃபைனான்ஸ் (+0.83%), பஜாஜ் ஃபின்சர்வ் (+0.81%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (-1.86%), எச்சிஎல் டெக்னாலஜிஸ் (-1.13%), டைட்டன் கம்பெனி லிமிடெட் (-0.86%), இண்டஸ் இண்ட் பேங்க் (-0.60%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (-0.47%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.