வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து டீசர் அப்டேட் கொடுத்த ‘லால்சலாம்’ படக்குழு! தீபாவளி ட்ரீட் லோடிங்..
ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஸ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மெய்தீன் பாய் என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியானது.
அதன் பிறகு, படத்தின் காட்சிகள் சிலது அழிந்து விட்டது இதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதைப்போல, படத்தை வாங்கி இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.
தங்கலான் படத்துடன் மோதும் ரஜினி படம்? களைகட்டப்போகும் பாக்ஸ் ஆபிஸ்!
இந்த தகவலுக்கு எல்லாம் மறுப்பு தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் லால் சலாம் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை வெளியீட்டு படம் அறிவித்தபடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதன்படி, லால் சலாம் திரைப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 10.45 மணிக்கு வெளியாகும் எனவும், படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் பண்டிகை அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.