தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் 20 தலைவர்கள் அதிரடி சுற்றுப்பயணம் -தமிழிசை
தமிழகத்தில் பாஜக வை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது .மோடியின் சாதனைகளால் தமிழகத்தில் பலர் பயனடைந்து வருகின்றனர் ,வாக்குச்சாவடி அளவுக்கு மட்டும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இல்லாமல் அணைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வலுப்படுத்த சுமார் 20 தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வருகின்றனர் .கலைஞர் இறப்பால் அது ஒத்திவைக்கப்பட்டது இன்று முதல் மீண்டும் தொடங்கும் என கூறினார் .
தமிழகம் தொடர்ந்து இரு தலைவர்களை இழந்துள்ளது அவர்கள் இல்லாமல் அரசியல் களம் மாறுபட்டதாக இருக்கும் எனவும் ,மக்களுக்காக சுயநலம் கருதாமல் செயல்படும் கட்சியாக பாஜக உள்ளது ஆகவே மக்கள் பாஜகவை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார் .
Dinasuvadu