SAvsAFG: ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

SAvsAFG

SAvsAFG: 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் அரைஇறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தொடரில் இதுவரை 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று 42 வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கவனே தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தேர்வாகியிருந்தாலும், ஒரு அணிக்கு 9 போட்டிகள் என்பதால், இன்று நடைபெறும் போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு கடைசி லீக் போட்டியாகும்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் வரலாற்று சாதனையை முறியடித்த ரச்சின்..!

இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்து, அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 2வது இடத்தை இழந்து, 3வது இடத்திற்கு தள்ளப்படும். இருப்பினும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அரையிறுதி போட்டி நடைபெறும் என்பதில் மாற்றம் இல்லை.

அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. மூன்று அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ள நிலையில், நான்காவது இடத்திற்காக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் போராடி வருகின்றன.

இந்த இரு அணிகளைத் முந்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், இந்த போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றால் மட்டும் போதாது. தங்களது ரன்ரேட்டையும் அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் நியூசிலாந்து அணி 0.743 அளவில் ரன்ரேட்டை வைத்துள்ளது. பாகிஸ்தான் 0.036 அளவில் ரன்ரேட்டை வைத்துள்ளது.

எனவே ஆப்கானிஸ்தான் தங்கள் ரன்ரேட்டை இன்னும் அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானும் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. தற்போது இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான்

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(C), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், இக்ராம் அலிகில்(W), முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்

தென்னாப்பிரிக்கா

குயின்டன் டி காக்(W), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அண்டில் பெஹ்லுக்வாயோ, டேவிட் மில்லர், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்