தீண்டாமை வேலி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.! உயர்நீதிமன்றம் காட்டம்.!
கரூர் மாவட்டம் இடையப்பட்டி எனும் ஊர் அருகே உள்ள சித்திரசீலமநாயக்கன் எனும் ஊரில், மனுதாரர் (உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்) அண்மையில் கலப்பு திருமணம் செய்துள்ளார்.
கலப்பு திருமணம் செய்து ஊருக்குள் வந்த போது ஊர் மக்கள் அவரை ஊருக்குள் விடாமல் தடுத்துள்ளனர். மேலும், அவரது வீட்டை சுற்றி 4 புறமும் தீண்டாமை வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி – அண்ணாமலை
இத வழக்கு விசாரணையானது நீதிபதி இளங்கோவன் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதி, தீண்டாமை வேலி அமைக்கப்பட்டு இருந்தால் அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அந்த வேலி அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம் சித்திரசீலமநாயகன் ஊற்றில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பாலவிடுதி காவல் ஆய்வாளர் உரிய விசாரணை நடத்தி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.