விமானத்தில் பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது..!

arrested

ஆந்திராவின் திருப்பதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 6-ஆம் தேதி, பிராங்பேர்ட்டில் இருந்து பெங்களூருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார். மும்பை-குவஹாத்தி விமானத்தில் பயணித்த பெண் பயணியை 52 வயது மதிக்கத்தக்க சங்கரநாராயணன் ரெங்கநாதன் நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்மணி இது தொடர்பாக பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (பிஐஏஎல்) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயது நபர்  சங்கரநாராயணன் ரெங்கநாதனை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், பயணத்தின் நடுவில், நான் தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து நான் எழுந்தபோது, அந்த நபர் என் அந்தரங்கத்தில் கையை வைத்ததைக் கவனித்தேன். நான் அவரது கையைத் தள்ளிவிட்டு மீண்டும் சென்றேன்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் எழுந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் கால்களுக்கு இடையில் எனது அந்தரங்கப் பகுதிகளில் கையை வைத்ததை நான் கவனித்தேன். பின்னர் நான் அவரது கையை இழுத்து, விமான ஊழியர்களை அழைத்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்