தீபாவளிக்கு என்னென்ன படங்கள் எல்லாம் பார்க்கலாம்? மார்க் ஆண்டனி முதல் ஜெயிலர் வரை இதோ…

thunivu

ஆண்டு தோறும் தீபாவளி பாண்டிகை என்றாலே திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற புது புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அந்த வகையில், இந்த வருடம் 2023 தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் எந்தெந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற விவரத்தை பார்க்கலாம்.

துணிவு

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில்  வெளியான துணிவு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன துணிவு படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்பதால் மக்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

போர்தொழில்

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல கோடிகளை லாபம் கொடுத்த திரைப்படம் என்றால் அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர்தொழில் படத்தை கூறலாம். நடுங்க வைக்கும் வகையில் க்ரைம் த்ரில்லர் கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

மார்க் ஆண்டனி

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்றே கூறலாம். இந்த திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி பண்டிகை அன்று ஒளிபரப்பாகிறது.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ஆம் தேதி கார்த்தி நடித்துள்ள ஜப்பான், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்,நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்