சம்பளத்தை சரியாக கொடுக்காத தயாரிப்பாளர்! கடுப்பாகி மெகா ஹிட் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?
நடிகை நயன்தாரா இதுவரை பல திரைப்படங்களில் நடிக்க மறுத்து இருக்கிறார். அவர் நடிக்க மறுத்து அந்த படங்களில் வேறொரு நடிகைகள் நடித்து அந்த திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக பெரிய ஹிட்ட்டும் ஆகியிருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் தான் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘பையா ‘ திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால், முதலில் நயன்தாரா தான் இந்த படத்தில் நடிக்கவிருந்தாராம். முதலில் படத்திற்கான கதையை நடிகை நயன்தாராவிடம் கூறி இயக்குனர் லிங்குசாமி சம்மதம் வாங்கிவிட்டாராம். படத்தின் கதையை கேட்டவுடன் நடிகை நயன்தாராவும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
பிறகு படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது சம்பளம் விஷயத்தை பற்றி படத்தின் தயாரிப்பாளர்கள் நயன்தாராவிடம் பேசினார்களாம். அந்த சமயம் நயன்தாரா பையா படத்தில் நடிக்க கமிட் ஆவதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாராம். அந்த படம் சரியாக போகாத காரணத்தினால் பையா படத்திற்கு சம்பளத்தை குறைத்து தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்களாம்.
கோடி கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட பையா கிளைமாக்ஸ்! கடைசி நேரத்தில் மாற்றியது ஏன் தெரியுமா?
இதனால் சற்று கடுப்பான நயன்தாரா நான் என்னுடைய வேலையை செய்யப் போகிறேன் அதற்கு எதற்கு சம்பளத்தை குறைத்து கொடுக்கிறீர்கள்? என்னுடைய வேலை சரியாக இல்லை. நான் சரியாக பட பிடிப்புக்கு வரவில்லை என்றால் நீங்கள் சொல்வது நியாயமாக இருக்கலாம். ஆனால் காரணமே இல்லாமல் என்னுடைய சம்பளத்தை எதற்காக குறைத்து தருகிறீர்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
பிறகு படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் நயன்தாரா கூறி படத்திலிருந்து விலகி விட்டாராம். அதன் பிறகு தான் இயக்குனர் லிங்குசாமி இந்த திரைப்படத்தின் கதையை தமன்னாவிடம் கூற அவருக்கு கதை பிடித்தவுடன் அவரும் படத்தில் நடித்து கொடுத்தாரா. இந்த படமும் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த பையா திரைப்படத்தில் முதலில் நடிகை நயன்தாரா நடிக்கவிருந்த இந்த தகவலை இயக்குனர் லிங்கு சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.