இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர்… 4 பேரை கைது செய்த NIA அதிகாரிகள்.!
வங்கதேசத்தில் இருந்து இந்தியவுக்குள் சிலர் ஊடுருவியதாக எழுந்த புகாரின் பெயரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், முதற்கட்டமாக, சென்னை அருகே படப்பை பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திரிபுராவை சேர்ந்தவர் போன்று போலி அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார் என கூறப்படுகிறது.
வயநாட்டில் நடந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் கைது.. இருவர் தப்பியோட்டம்..!
இதனை தொடர்ந்து, சென்னை, மறைமலைநகரில் முன்னா, மியான் எனும் 2 வங்கதேச நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக புதுச்சேரி மாநிலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் எள்ளலைப்பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள வெளிநாட்டு ஏஜெண்டுகள் வீடுகளில் நடந்த சோதனையில், கொல்கத்தாவை சேர்ந்த பாபு என்பவர் வங்கதேச நபர்கள் இந்தியாவில் ஊடுருவ உதவியதாக என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச நபர்கள் இந்தியாவில் ஊடுருவியது தொடர்பாக நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை 4 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.