இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க போகும் யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா இவரின் பெயர் 2000-களில் பிறந்தவர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தெரியலாம். ஆனால் 90-களில் பிறந்தவர்களுக்கு இவரின் பெயரை விட இவர் இசையில் வெளியான பாடல் வரிகளை நன்றாக ஞாபகம் இருக்கும். அப்படி ஒரு பெயர் வாங்கிய இசையமைப்பாளர். அதனை தற்போது வரை நிரூபித்து வருகிறார்.
தற்போது அவர் முதன் முதலாக தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘பியர் பிரேமா காதல் ‘ இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் சென்றவாரம் ரிலீசாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எழுந்தாலும் அது வசூலை பாதிக்கவில்லை.
இந்நிலையில் இவர் ஒரு ஆல்பம் தயாரித்து இசையமைக்க போவதாகவும், அது இலங்கை தமிழர் இனப்படுகொலை பற்றியது எனவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வெளிவந்தால் அது அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.