விஜய் தேவரகொண்டாவின் லிப்லாக் சீன் லீக்கானது : விளம்பரத்திற்காக வெளியிட்டார்களா ??
தெலுங்கு சினிமாவில் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பெல்லி சுப்புலு’ ‘அர்ஜுன் ரெட்டி’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
அவர் அடுத்ததாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்கம் இன்கம் பாடல் தெலுங்கு சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முத்தக்காட்சி இணையத்தில் லீக் ஆகி வேகமாக பரவி வருகிறது. இது படக்குழுவில் யாரோ ஒருவர் தெரியாமல் திருட்டுத்தனமாக வெளியிட்டார்களா? அல்லது படக்குழுவே விளம்பரத்திற்காக வெளியிட்டார்களா என தெரியவில்லை.