“டைம்டு அவுட்” டிஸ்மிஸல் – ஆதாரங்களை பகிர்ந்து கேள்வி எழுப்பிய ஏஞ்சலோ மேத்யூஸ்!

Angelo Mathews

இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், ஆதரவு வெற்றிக்காக போட்டியிட்டனர். இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், இலங்கை அணியை முதலில் பேட்டி செய்ய கேட்டுக்கொண்டார்.

அதுபோன்று, 5 ரங்களில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி, அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தனர். இதில், நான்காவது விக்கெட்டாக சதீர சமரவிக்ரமா ஆட்டமிழந்தார். இதையடுத்து முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், உள்ளே வந்ததும் ஹெல்மெட் சரி இல்லாததை அறிந்த அவர், வேறு ஹெல்மெட்டை எடுத்துவர சொல்லி காத்திருந்தார்.

ஆனால், ஹெல்மெட் எடுத்து வர நேரம் ஆன நிலையில், ​​பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், மேத்யூஸுக்கு எதிராக டைம்டு அவுட் விதியை சுட்டிக்காட்டி நடுவரிடம் முறையிட்டார். ஷாகிப் அல் ஹசனின் முறையீட்டிற்குப் பிறகு நடுவர் மேத்யூஸை அவுட் செய்து அவரை திரும்பிச் செல்லும்படி கூறினார். இதன் பின்னர் நடுவரும், மேத்யூஸும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

146 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் .. கடுப்பான ஏஞ்சலோ மேத்யூஸ்..!

ஆனால் இறுதியில் இலங்கை வீரர் மேத்யூஸ் ஒரு பந்தையும் எதிர்கொள்ளாமல் கோபத்தோடு பெவிலியன் திரும்பி சென்றார். குறிப்பிட்ட நேரத்திற்கு பேட் செய்யாததால் “டைம்டு அவுட்” விதிப்படி நடுவர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.  இதுபோன்று வித்தியமான முறையில் அவுட் ஆனது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முறையாகும். இதுதான் தற்போது பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இலங்கை ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது எக்ஸ் தள பதிவில், தனது ஹெல்மெட் கழற்றப்பட்டபோது இன்னும் ஐந்து வினாடிகள் எஞ்சியிருந்தன என கூறி வீடியோ ஸ்டில்களை ஆதாரமாக பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த பதிவில், 4வது நடுவர் இங்கே தவறு செய்துள்ளார். ஹெல்மெட் கொடுத்த பிறகும் எனக்கு இன்னும் 5 வினாடிகள் இருந்ததை வீடியோ ஆதாரம் காட்டுகிறது.

4வது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பி  ஏஞ்சலோ மேத்யூஸ், ஹெல்மெட் இல்லாமல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு போட்டிக்கு பிறகு பேசிய அவர், வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசன் செய்த காரியம் மிகவும் மோசமானது, அவமதிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்