#HBDUlaganayagan : நா நடிகனே கிடையாது கமல் பக்தன்! ரோபோ சங்கர் ஸ்பீச்!

robo shankar

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன விருமாண்டி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில், படம் ரீ-ரிலீஸ் ஆனதையே இப்போது வெளியானது போல கொண்டி தீர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், விருமாண்டி படத்தின் ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தை கமலா திரையரங்கில் கொண்டாடி வரும் ரோபோ ஷங்கர் கமல்ஹாசன் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ” இந்த நவம்பர் 7-ஆம் தேதி தான் நம்மவர் பிறந்த நாள். இந்த மாதாமே நம்மவருடைய மாதம் தான். அவருடைய ரசிகனாக நான் என்னுடைய தலைமையில் விருமாண்டி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவேண்டும் அதனை ஒரு விழாவாக கொண்டாவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் தான் இப்படி ஒரு கொண்டாட்டம்.

இந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்த கமலா திரையரங்கம் மற்றும் கமல் சாருக்கு நான் இப்போது நன்றியை தெரிவித்து கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று மட்டுமில்லை அடுத்த 3 நாட்களுக்கு திரையரங்கு முழுவதும் டிக்கெட் புக் ஆகி இருக்கிறது. விருமாண்டி படம் மட்டும் இல்லை அடுத்ததாக நாயகன் படமும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

நான் சிறிய வயதில் இருந்து கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன். 35 வருடங்கங்களாக நான் அவரை ரசித்து கொண்டு இருக்கிறேன். ஒரு நடிகராக நான் இதனை செய்யவில்லை ஒரு பக்தானாக தான் செய்து வருகிறேன். என்னை போல சினேகன் பலருக்கும் கேக்குகளை கொடுத்து வருகிறார்” எனவும் நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்