சத்தீஸ்கர், மிசோரம் சட்டமன்ற தேர்தல் – இன்று வாக்குப்பதிவு

Election

இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில்,  20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் பஸ்தார் மக்களவை தொகுதியின் 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ராஜ்நந்த்கான் மக்களவைத் தொகுதியின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்படி, 10 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க 9 மணி நேரமும், மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு 8 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளது. 10 சட்டசபை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக இன்று தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளில் மொத்தம்  மொத்தம் 223 வேட்பாளர்கள் உள்ளனர். 40 லட்சத்து 78 ஆயிரத்து 681 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். சத்தீஸ்கரில்2-ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 1276 வாக்குச் சாவடிகளில் 4,13,064 ஆண் மற்றும் 4,39,028 பெண் வாக்காளர்கள் உட்பட 8,52,088 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் மும்முனைப் போட்டி நிலவுவதால் மிசோ தேசிய முன்னணி மற்றும் காங்கிரஸ் மற்றும் சோரம் தேசியவாத கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்