வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்…
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதற்கான பாட்டாசு விற்பனை, புத்தாடை விற்பனை, வண்ண வண்ண அலங்கார பொருட்கள் என நாடே திருவிழாவுக்கு தயாராகி வருகிறது.
இந்த தீபாவளிக்கு பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அனைத்தும் ஒரே நாளை குறிப்பது காலத்தின் ஆச்சர்யம் தான். தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி தினமானது, 5 நாள் கொண்டாட்டமாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர பூஜையும்…
திருமால் அவதாரமான ராமர் ராவணனை வதம் செய்து பின்னர், 14 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்து பின்னர் சீதையுடன் நாடு திரும்புவார். ராமர் நாடு திரும்பிய நாளை மக்கள் தீபாவளி தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தீபாவளி தினத்தை இருள் நீங்கி வெளிச்சம் கொண்டு வரவேற்கும் 5 நாள் விழாவாக வடமாநிலத்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
- வெள்ளி (நவம்பர் 10, 2023) தந்தேராஸ் எனப்படும் தனத்ரயோதசி தீபாவளி.
- சனிக்கிழமை (நவம்பர் 11, 2023) ஜோதி தீபாவளி.
- ஞாயிறு ( நவம்பர் 12, 2023) தீபாவளி.
- செவ்வாய் ( நவம்பர் 14, 2023) – கோவர்தன் தீபாவளி.
- புதன் (நவம்பர் 15, 2023)- சகோதர தீபாவளி.
தனத்ரயோதசி தீபாவளி :
தனத்ரயோதசி தீபாவளி நாளில் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. மேலும் இந்த நாளில் தங்கம், வெள்ளி, சொத்துக்கள், வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இதற்கு ஏற்ற நேரம் காலை 6.20 முதல் இரவு 8.19 வரை.
ஜோதி தீபாவளி :
ஜோதி தீபாவளி நாளில், மக்கள் காளி தேவி, ஹனுமான் ஆகியோரை வணங்குகிறார்கள். ஜோதி தீபாவளி 12 நவம்பர் 2023 அன்று கொண்டாடப்படும். இது நவம்பர் 11 ஆம் தேதி மதியம் 1:57 மணிக்கு தொடங்கி நவம்பர் 12 ஆம் தேதி பிற்பகல் 2:43 வரை தொடரும்.
தீபாவளி தினம் :
முக்கிய தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12 அன்று மதியம் 2:43 மணிக்கு தொடங்கி நவம்பர் 13 அன்று மதியம் 2:55 மணிக்கு முடிவடையும். அதன் காரணமாக இந்த முறை தீபாவளி 12 நவம்பர் 2023 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், மகாலட்சுமி பூஜை மற்றும் விநாயகர் பூஜை செய்வார்கள்.
கோவர்தன தீபாவளி :
மாட்டுப்பொங்கல் போல, இது கால்நடை தீபாவளி. காலண்டர்களுக்கான பூஜை நடைபெறும். கால்நடை தீபாவளி ( நவம்பர் 14, 2023 ) பூஜை செய்ய உகந்த நேரம் காலை 6.15 முதல் 8.36 வரை மேற்கொள்ளலாம்.
சகோதர தீபாவளி :
சகோதர சகோதரிகளின் தீபாவளி திருவிழாவாக பாய் தூஜ் என்ப்படும் சகோதர தீபாவளி 15 நவம்பர் 2023 அன்று கொண்டாடப்படும். மதியம் 2.36 மணிக்கு தொடங்கி 15 நவம்பர் 2023 அன்று மதியம் 1.47 வரை இந்த தீபாவளி தொடரும்.