ஆளுநர்கள் மக்களால் தேர்வான ஆட்சியாளர் அல்ல – உச்சநீதிமன்றம்

Punjab Governor

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறுகையில்,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினர்.

நீட் தேர்வால் இன்னோர் உயிர் போய்விடக்கூடாது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!

பஞ்சாபை போல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளுக்கும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கண்டிப்பாக ஆளுநர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே பஞ்சாப் அரசு கூறுகையில், பஞ்சாப் பேரவை கூடுவதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முட்டுக்கட்டையாக உள்ளார். கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கும் ஒப்புதல் தரவில்லை. ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துள்ள மசோதாக்களில் நிதி மசோதாவும் அடங்கும் என கூறியதை அடுத்து, பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்