கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த பேருந்து விபத்து! 4 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்…

Rajasthan

இராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தவுசா ஆட்சியர் வட்டம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, தௌசா ஆட்சியர் அலுவலகம் அருகே அதிகாலை 2.15 மணியளவில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் காரணமாக ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன்.

பின்னர், காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ்களில் ஏற்றி தௌசா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், நான்கு முதல் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

உயிரிழந்த நான்கு பயணிகளில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவர். இறந்தவர்களின் உடல்கள் தோசா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்  சம்பவம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்