‘நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்ணுகின்றனர்’ – ஆளுநரின் கண்டனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்…!
சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் கூட ஆளுநரை மாநிலத்தை விட்டு விரட்டும் அளவுக்கு சுயமரியாதையுடன் இருந்தனர்.
ஆனால் உப்பை தின்னும் தமிழர்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரிழந்த 50 பேரின் மரணத்திற்கும் ஆளுநர் ரவி தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.
ஆர் எஸ் பாரதி இந்த கருத்துக்கு தமிழக ஆளுநர் ரவி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த கண்டன பதிவில், ‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்து இருந்தார்.
ஆளுநரின் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாகலாந்து மக்களை நான் இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. நான் தவறாக பேசவில்லை. ஆளுநர் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.