ஹமாஸ் தலைவரைக் கண்டுபிடித்து ஒழிப்போம்- பாதுகாப்பு அமைச்சர் சபதம்
இஸ்ரேலியப் படைகள் காஸாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பலவற்றை அழித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், பாலஸ்தீன மக்களுக்கு பயங்கரவாதக் குழுவின் காசா தலைவர் யாஹ்யா சின்வாரைக் கண்டுபிடித்து இஸ்ரேலிய படைகள் ஒழித்துக் கட்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் எச்சரித்துள்ளார்.
இதற்கு ஓராண்டு ஆனாலும், இஸ்ரேல் தன் பணியை கண்டிப்பாக முடிக்கும் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏறக்குறைய ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இப்போது வரை 1400 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 3,760 குழந்தைகள் உட்பட 9,061 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து – காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை!
இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிகிழமை அன்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், போர் வெடித்த பின்னர் இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு வந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.