நாகா மக்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு.! ஆர்.எஸ்,பாரதிக்கு ஆளுநர் ரவி கண்டனம்.!

RSBharati

ஆளும் திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான வார்த்தை மற்றும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் நீட் விலக்கு, ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உரிய நேரத்தில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வந்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! 

இதனால் தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல், அதனை தாமதப்படுத்தி வருகிறார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக சில விஷயங்களை ஆளுநர் செய்வதாவும் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசு பரிந்துரையின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான தீர்மானம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வந்தது. இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் தற்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகா இன மக்கள் குறித்து அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், என இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதியின் இத்தகைய பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு.பாரதியை வலியுறுத்துகிறேன்.” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்