அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு உரிமை இருக்கு – இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

vetrimaaran - vijay

சமீபத்தில், லியோ வெற்றி விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய விஜய், தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார் நடிகர் விஜய்.

இதனையடுத்து, விஜய்யின் அரசியல் பாதை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். சமீப, நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிலர், விஜய் அரசியலுக்கு வரலாம் போன்ற ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளனர்.

அந்த வகையில், இன்று சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த தூய்மை பணியை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெற்றிமாறன், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது. அது முற்றிலும் வரவேற்கத்தக்கது, நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம், முன்னதாக கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதுதான் அடித்தளமே என்று கூறியதோடு, அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் செயல்பட்டு வருகிறார் என்று கூறியது பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.

கரெக்சன் சொல்லிக்கொண்டே இருந்த தனுஷ்! கடுப்பாகி சந்தானம் கிட்ட கிளம்பிய இயக்குனர்?

தொடர்ந்து  பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசியலிலும் சமூகத்திலும் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, சமீப காலமாக நல்ல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சமூகத்தில் நல்லவிதமான உரையாடல்களை சினிமா ஏற்படுத்தியுள்ளது என்று கூறியதோடு, ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியான பிறகு அந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துள்ளது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்