பிரதமர் மோடி மீது இவ்வாறு குற்றம்சாட்டினால் அவரை அமலாக்கத்துறை விசாரிக்குமா? – பூபேஷ் பாகல்
இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், சத்தீஸ்கரில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
#Breaking : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்..!
மகாதேவ் என்ற பெயரில் செயலி நடத்தி பணத்தை ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த செயலி மூலம் ஏமாற்றிய பணத்தை அரசியல்வாதிகளுக்கு கொடுத்ததாகவும் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும், ரூ.5 கோடி ரொக்கம் பிடிபட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அமலாக்கத்துறையின் குற்றசாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். சத்தீஸ்கரில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது என்றும், பிரதமர் மோடி மீது யாரவது இவ்வாறு குற்றம்சாட்டினால் அவரை அமலாக்கத்துறை விசாரிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.