கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.! 3 நாட்களில் ரூ.232 ஏற்றம்.!

Gold

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களாக பங்குச்சந்தை ஆனது சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் விலையில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி கடந்த மூன்று நாட்களில் தங்கம், விலை குறைந்தே விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் உற்சாகமடைந்தன. ஆனால் அடுத்த 2 நாட்களில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் (04.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,715 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 45,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,185 ரூபாய்க்கும், சவரன் 49,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் உயர்ந்து ரூ.78,000 ஆக விற்பனையாகிறது.

(03.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு ரூ.5 ரூபாய் உயர்ந்து 5,700 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, 45,600 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி 1 கிராம் ரூ.77 ரூபாய்க்கும், 1 கிலோ ரூ.77,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs