கழுகுக்கு பசி எடுத்து கீழ இறங்குனா அடிச்சு கொல்றதே காக்காவை தான்! ரத்னகுமாருக்கு மீசை ராஜேந்திரன் பதிலடி!

Meesai Rajendran rajini

கோலிவுட் சினிமாவில் இப்போது பேசும் பொருளாக இருப்பது என்றால் கழுகு -காகம் கதை தான். முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘கழுகு கீழே இறங்கினால் அதனை காக்க தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் உயரத்திற்கு காக்காவல் பறக்கவே முடியாது’ என தெரிவித்து இருந்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் விஜய்யை தான் காகம் என்று ரஜினி சொல்கிறார் என்று கிளப்பி விட்டனர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனையடுத்து, எரியும் தீயில் எண்ணையை ஊற்றும் படி லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னக்குமார் எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே இறங்கி தான் ஆகவேண்டும்” என ரஜினி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

கழுகு கழுகா தான் இருக்கு…காக்கா தான் கழுகாக முன்னேறிக்கிட்டு இருக்கு! – கே.ராஜன்

ரத்னக்குமார் இப்படி பேசிய காரணத்தால் ரஜினி ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள். ரத்னக்குமார் பேசியது தவறு என பல பிரபலங்களும் கூறி வருகிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் கே.ராஜன் ரத்னக்குமார்  பேசியது தவறு என கூறியிருந்தார். அவரை தொடர்ந்து நடிகரும், சினிமா விமர்சகருமான மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் கழுகுக்கு பசி எடுத்தா கீழ தான் வந்தாகணுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேட்டியில் பேசிய மீசை ராஜேந்திரன் ” பொதுவாக மேடையில் பேசுகிறோம் என்றால் அதற்கு மேடை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால், ரத்னக்குமார்  பேசியது மேடை நாகரீகமே கிடையாது. வயது வித்தியாசம் என இருக்கிறது. கழுகு பசி எடுத்து என்றே கீழே இறங்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

ஆனால், கழுகு கீழே பசி எடுக்கிறது என்று இறங்கினால் அது முதலில் அடித்து சாப்பிடுவதே காக்காவை தான். நான் இதனை நேரிலே பார்த்திருக்கிறேன். காக்காவை கொன்று பிடித்த பிறகு தான் புறாவை கழுகு பிடிக்கும். கழுகுக்கு முதல் எதிரியே காக்க தான். எனவே ரத்னக்குமார் பொது மேடையில் இப்படி பேசி இருக்கவே கூடாது.

நீ முதலில் கிளம்பு! ரத்னகுமார் பேசியதற்கு செம கடுப்பான நடிகர் விஜய்?

ரத்னக்குமார் இப்பொது தான் வளர்ந்து வருகிறார். படங்களில் வசனம் எழுதி வருகிறார் ஒரு பெரிய இயக்குனராக வளர அவருக்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் ரஜினி சாரை வைத்து இயக்கும் படத்தில் கூட வாய்ப்பு கிடைக்கலாம் எனவே ரத்னக்குமார் இப்படி பேசியது அவருடைய சினிமா வாழ்க்கையை பாதிக்கும்” எனவும் நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
AFGvAUS - 1st innings
NTK Leader Seeman
NTK Leader Seeman
Afghanistan vs Australia
tamilnadu city in rain
seeman