கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!
நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்து இருந்தது. சில மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நாளை கன்னியாகுமரியில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.