கோவை கார் குண்டு வெடிப்பு – நசீரை நவ.17 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

CoimbatoreCarBlast

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவம்பர் 17 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, இவ்வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 15வது நபராக போத்தனூரை சேர்ந்த நசீரை என்ஐஏ கைது செய்தது.

இந்த நிலையில், என்ஐஏவால் கைது செய்யப்பட்ட நசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது – டிடிவி தினகரன்

இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவ்வப்போது, இதுதொடர்பாக சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தசமயத்தில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவம்பர் 17 வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்