பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக அரசு ஒட்டு மொத்த இந்திய மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கொன்றுவிட்டது- சீதாராம் யெச்சுரி
பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக அரசு ஒட்டு மொத்த இந்திய மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கொன்றுவிட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் மோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்திவிட்டது.வேண்டுமென்றால் இந்தியாவின் எந்தவொரு சிறு, குறு தொழில்களையும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்கள் மீதும் ஜிஎஸ்டி என்ற பெயரில் மிகக் கடுமையான மறைமுக வரிகள் திணிக்கப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பு சிறு வணிகர்களும் வர்த்தகத்தை இழந்து தவிக்கிறார்கள். அதன் விளைவாக வேலைவாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணமதிப்பு நீக்கம் என்ற பேரழிவு மிகப்பெரும் தாக்குதலை இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தாண்டின் தீபாவளியை மோடி அரசு பறித்துக் கொண்டது.என்று தனது ட்விட்டர் பகிர்ந்து எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரி.