#29yearsofPeriyaMarudhu : துளியும் மேக்கப் இல்லாமல் நடித்த விஜயகாந்த்! ‘பெரியமருது’ படம் பற்றிய சீக்ரெட்ஸ்!

periya marudhu movie

விஜய்காந்த் நடிப்பில் வெளியான பெரிய மருது திரைப்படம் வெளியாகி 29-ஆண்டுகள் ஆன நிலையில் படம் பற்றிய சில தகவலை பார்க்கலாம். 

பெரிய மருது

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் சிகர்ளுக்கு பேவரைட் திரைப்படமாக இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அதில்  என்றால் இயக்குனர் என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘பெரிய மருது’. இந்த படத்திற்கு முன்பே விஜயகாந்திற்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இருந்தாலும் அந்த ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதிகமாக்கி கொள்ள உதவியது என்றால் இந்த திரைப்படம் தான்.

அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் அருமையாக நடித்திருப்பார். இந்த படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக நடிகை ரஞ்சிதா நடித்திருந்தார். சங்கிலி முருகன், பீலி சிவம், மகேஷ் ஆனந்த், தலைவாசல் விஜய், ம். ன். நம்பியார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

29 ஆண்டுகள்

இந்த பெரிய மருது திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதே நாளில் (நவம்பர்3 ) கடந்த 1994-ஆம் ஆண்டு தான் இந்த வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 29-ஆண்டுகள் ஆகிறது. எனவே, படம் பற்றி யாருக்கும் தெரியாத சீக்ரெட்ஸ் பற்றி பார்க்கலாம்.

படம் பற்றிய சீக்ரெட்ஸ்

இந்த படத்தின் சீக்ரெட் என்னவென்றால், படத்தில் நடிகர் விஜயகாந்த் மேக்கப் போட்டுக்கொள்ளாமல் எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் நடித்தார். அந்த சமயம் எல்லாம் மேக்கப் போட்டு கொண்டால் தான் அழகாக இருப்போம் என்ற காரணத்தால் ஹீரோக்கள் மேக்கப் போட்டு கொண்டு நடிப்பார்கள். அப்படியான காலகட்டத்திலே விஜயகாந்த் இந்த பெரிய மருது திரைப்படத்தில் மேக்கப் இல்லாமலே நடித்து கொடுத்தார்.

மேக்கப் போட்டு கொண்டு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட படத்தை பார்க்கும்போது அந்த கம்பீர மீசையுடன் அத்தனை அழகாக வசீகரத்துடன் இருப்பார். இதனை படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். இந்த படம் வெளியான சமயத்தில் தான் ‘நாட்டாமை’ திரைப்படமும் வெளியானது. நாட்டாமை படம் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு இந்த பெரிய மருது திரைப்படமும் கொண்டாடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்