தூத்துக்குடி காதல் ஜோடி வெட்டிக் கொலை.! பெண்ணின் தந்தை கைது.!
தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் இவர்கள் கடந்த 30ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி முருகேசன் நகரில் அவர்கள் இருந்தபோது நேற்று ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் வெட்டி உள்ளது.
தூத்துக்குடியில் பயங்கரம்.! காதல் ஜோடி வீடு புகுந்து வெட்டி கொலை.!
இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திகாவும், மாரி செல்வம் உயிரிழந்து விட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்த்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மாரிச்செல்வம், கார்த்திகா இருவரது உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். ஏற்கனவே இவர்கள் திருமணத்திற்கு கார்த்திகாவின் வீட்டில் தான் எதிர்ப்பு இருந்ததாகவும், ஆதலால், இந்த கொலையில் பெண் வீட்டாருக்கு தொடர்பு இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.