ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு..!
ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக விஷயங்களை ஆளுநர் செய்வதாக தமிழக அரசு 2-வது மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலம் வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாக கூறி ரிட் மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போடுவதற்கு எதிராக ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.