தோல்விக்கு கண்டிப்பா இவங்கதான் காரணம் …!புலம்பும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
பேட்ஸ்மேன்களே இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியுற்றதற்கு காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் இன்னிங்சில், இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை அளித்தனர். இதனால், முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்ததுஇந்திய அணி 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கூறுகையில், லார்ட்ஸ் போட்டியில் விளையாடியது குறித்து பெருமை கொள்ள முடியவில்லை. வானிலை கணிக்க முடியாத அளவுக்கு இருந்ததால் வியூகம் வகுப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் விட்டுக் கொடுக்காமல் முழு திறனை வெளிப்படுத்தி விளையாடியதால் அவர்களுக்கே வெற்றி உரித்தானது என்று கோலி பாராட்டினார்.
DINASUVADU