காதலியை கரம் பிடிக்க துடிக்கும் காளிதாஸ் ஜெயராம்! விரைவில் டும்…டும்..தான்!

tarini kalingarayar

நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தாரிணி மாடல் அழகி ஆவார். இவரும் காளிதாஸ் ஜெயராமும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள்.

தங்கள் இருவரும் காதலிப்பதாக காளிதாஸ் ஜெயராம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரிணியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்தார். இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் இவர்களுடைய இரு வீட்டாருக்கும் தெரியும். குறிப்பாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூட தாரிணி காளிதாஸ் ஜெயராம் குடும்பத்துடன் கொண்டாடினார்.

இருவருடைய வீட்டிற்கே காதலிப்பது தெரியும் என்ற காரணத்தால் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த பேஷன் மாடல் விருது தாரிணிக்கு வழங்கப்பட்ட விருது விழாவின் போது இவர்களுடைய திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதற்கு பதில் அளித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ கிளிப் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. வீடியோவில், தொகுப்பாளர் காளிதாஸை மேடையில் வரவேற்று, தாரிணியின் வெற்றிக்குக் காரணம் என்று எதனை நினைக்கிறீர்கள் எனவும், இருவருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி கேட்டார். அதற்கு  காளிதாஸ், “நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண் அவள்” என்று வெட்டப்பட்டு கொண்டே கூறுகிறார்.

இதனை கேட்ட தாரிணி இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து அவரும் வெட்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan